என் மலர்
செய்திகள்

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடிகளில் ஜனவரி 1-ந்தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்
ஜனவரி 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த பாஸ்டேக் திட்டத்தின்படி வாகனத்தின் விபரம், உரிமையாளர் பெயர், ஆதார் கார்டு, பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டும் பாஸ்டேக் அட்டையை பெற 22 வங்கிகளுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
அதன்படி பாஸ்டேக் அட்டையில் பணம் செலுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தின் முன்பகுதி கண்ணாடியில் பாஸ்டேக் அட்டை ஒட்டிக்கொண்டால் அந்த வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும் போது அங்கு பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கருவி பாஸ்டேக் அட்டையில் இருந்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும்.
இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்காமல் வாகனங்கள் விரைவாக செல்ல முடியும்.
பாஸ்டேக் அட்டையை அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் வங்கிகள், இணைய தளத்திலும் பெற்று கொள்ளலாம். அட்டையில் தொகை குறையும் போது ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதற்கிடையே 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதேபோல் 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்காரி கூறும்போது, ‘வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் அட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.
இந்த நடைமுறையால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும். நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவுவதன் மூலம் சாலை பணியாளர்களுக்கு பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story