search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்
    X
    வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்

    விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் மேற்கு வங்கம் மட்டும் இணையவில்லை -வேளாண் மந்திரி தோமர்

    பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தில் சேரும்படி மேற்கு வங்க முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.
    புதுடெல்லி:

    பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவித்தார். இதன்மூலம் 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றினார். 

    அப்போது பேசிய அவர், மேற்கு வங்காளத்தின் 70 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் இந்த நிதியுதவி திட்டங்களின் நன்மைகளை இழந்துவிட்டதாகவும், இந்த திட்டங்களின் நன்மைகளை விவசாயிகளை அடைய அனுமதிக்காத ஒரே மாநிலம் மேற்கு வங்காளம் என்றும் கூறினார். 

    பிரதமர் மோடி

    முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டவர்கள் மாநிலத்தை அழித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் குறித்து வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைந்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    ‘இந்த திட்டத்தின்கீழ் மேற்கு வங்கத்தில் 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். எனவே, இந்த திட்டத்தில் இணையும்படி மேற்கு வங்க முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். விவசாயிகளை தவறாக வழிநடத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் பொதுமக்கள் பாடம் கற்பிப்பார்கள்’ என்றும் தோமர் கூறினார்.
    Next Story
    ×