search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 51 லட்சம் பேர் தயாராக உள்ளனர்- அரவிந்த் கெஜ்ரிவால்

    முன்னுரிமை நபர்களுக்கு தடுப்பூசி பெற, சேமிக்க மற்றும் போட்டுக்கொள்ள டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னேற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் கொரோனா நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது, நோய்த்தொற்று வீதம் குறைந்து உள்ளது, ஆனால் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, அவற்றை நாம் முழுமையாக நிறுத்த வேண்டும்.

    "நகரத்தில் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து நான் மதிப்பாய்வு செய்தேன், நாங்கள் இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முற்றிலும் தயாராக உள்ளோம்.

    சுகாதாரப் பணியாளர்கள் முதன்முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள், அவர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். பின்னர் சுமார் 6 லட்சம் முன்னணி தொழிலாளர்கள் போலீசார் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உள்ளனர். பின்னர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் நகரத்தில் 42 லட்சம் பேர் உள்ளனர்.

    ஏறக்குறைய 51 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் தடுப்பூசி பதிவு செய்த 1.15 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் இருக்கும்.

    நாட்டில் ஒரு தடுப்பூசியின் ஒப்புதலுக்காக நாம் காத்திருக்கும்போது இந்த செயல்முறைகள் அனைத்தும் நிறைவடைகின்றன. இந்த முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி போட நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் என கூறினார்.
    Next Story
    ×