search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லடாக்கில் ராணுவ தளபதி நரவனே ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.
    X
    லடாக்கில் ராணுவ தளபதி நரவனே ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.

    லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவனே திடீர் ஆய்வு

    லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிறிஸ்துமசையொட்டி வீரர்களுக்கு கேக் வழங்கினார்.
    புதுடெல்லி:

    லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த கடந்த ஜூன் மாதம் இந்திய வீரர்கள் மற்றும் சீன துருப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் நிலை நிலவி வந்தது.

    இதனால் படைகள் தயார்படுத்தப்பட்டு லடாக் எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டனர். சீனா தரப்பிலும் அதே எண்ணிக்கையிலான துருப்புகள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இருதரப்பிலும் படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக ராணுவ மற்றும் தூதரக ரீதியாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனாலும் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த உறுதியான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தற்போது, எல்லையில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் நேற்று இந்திய ராணுவ தளபதில் மனோஜ் முகுந்த் நரவனே எல்லைப்பகுதியை பார்வையிடுவதற்காக நேற்று லடாக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். காலை 8.30 மணிக்கு லடாக் சென்றடைந்த அவர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என வீரர்களை கேட்டுக்கொண்டார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ராணுவ தளபதி நரவனே ராணுவ வீரர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
    Next Story
    ×