search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக்கி பாண்டிங்
    X
    ரிக்கி பாண்டிங்

    ரிக்கி பாண்டிங் பாடுவதாக கூறி வைரலாகும் வீடியோ

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கிங் பாண்டிங் பாடுவதாக கூறி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    பிரபலங்கள் திரைப்பட பாடல்களுக்கு வெவ்வேறு கோணத்தில் அவரவர் விருப்பப்படி பாடி மகிழ்வதும், அதையே வீடியோவாக படமெடுத்து பதிவிடுவது வழக்கமான ஒன்று தான். எனினும், வெளிநாட்டினர் இந்திய திரைப்பட பாடல்களை பாடுவது சற்றே வித்தியாசமான நடைமுறை எனலாம்.

    அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஜார்ஜ் ஃபோர்மென் இணைந்து இந்திய திரைப்பட பாடலை பாடியதாக கூறி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

     வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    வைரல் வீடியோவுடன் பதிவுகளையும் ஆய்வு செய்ததில் அவை முழுக்க தவறான ஒன்று என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது அமெரிக்காவில் பிறந்த பாலிவுட் பாடகர் ஜெப்ரி இக்பால் ஆகும். மற்றொருவர் கேரளாவை சேர்ந்த தப்லா இசைக்கலைஞர் ஜோமி ஜார்ஜ் ஆகும்.

    இதே வீடியோ டிசம்பர் 12, 2004 ஆம் ஆண்டு ஜெப்ரி இக்பால் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இது ஆறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். மேலும் இதில் இருப்பவர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜார்ஜ் ஃபோர்மென் இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×