search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை - சொல்கிறார் அமித்ஷா

    மேற்குவங்காளத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்குவங்ங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 

    ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி 
    மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையில், மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்குவங்காளத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது பயணத்தின் கடைசி நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அம்மாநிலத்தின் போல்பூர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியிலும் அமித்ஷா பங்கேற்றார்.

    இந்நிலையில், தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்த அமித்ஷா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கிய விதத்தை பாஜக கண்டிக்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் அந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளேன்.     

    ஒரு ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் அவரது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை பாஜக நம்புகிறது. தாக்குதல் நடத்துவதால் பாஜக-வை தடுத்து நிறுத்த முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். மேற்கு வங்கத்தில் எங்கள் தளத்தை நிறுவ நாங்கள் பணியாற்றுவோம்.

    அரசியல் வன்முறை வங்காளத்தில் உச்சத்தில் உள்ளது. 300-க்கும் அதிகமான பாஜக கட்சியினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    மம்தா பானர்ஜி உங்களை தோற்கடிக்க டெல்லியில் இருந்து யாரும் வரவில்லை. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மக்கள் செல்லமுடியாத வகையிலான நாட்டு வேண்டும் என மம்தா எண்ணுகிறாரோ? இந்த வகை பழமையான எண்ணங்களை மேற்குவங்காள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 
      
    தங்கள் மருமகன்களை கட்சி பொறுப்பில் எல்லா கட்சிகளும் வைக்கவில்லை என நினைக்கிறேன். பாஜகவில் ஒரு போதும் குடும்ப அரசியல் கிடையாது. மேற்குவங்காளத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை.  

    என்றார்.
    Next Story
    ×