search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால்

    டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது பரிசோதனையை குறைக்க சொன்னார்கள் - கெஜ்ரிவால்

    டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறையுங்கள் என சிலர் தன்னிடம் கூறியதாக முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் உச்சபட்சமாக தினமும் சராசரியாக 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வைரஸ் பாதிப்பு வெளிவாக குறைந்துள்ளது.

    டெல்லியில் நேற்று 1,418 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 14 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 37 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 160 பேர் குணமடைந்துள்ளனர். 

    அதேவேளை டெல்லியில் தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்த போது கொரோனா பரிசோதனையை குறைத்து மோசடி செய்யுங்கள் என சிலர் என்னிடம் கூறினர். 

    கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதற்காக மற்ற பகுதிகளிலும் இதே மோசடி நடைபெற்று வருவதாகவும் கூறினர். ஆனால், கொரோனா பரிசோதனையை குறைக்கக்கூடாது மக்களின் உயிர் மிகவும் முக்கியம் என நான் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கூறினேன். 
      
    டெல்லியில் கொரோனாவின் 3-வது அலை முடிவடைந்துவிட்டது. டெல்லியில் தற்போது தினமும் 90 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. டெல்லி தான் நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் இடமாக உள்ளது.

    என்றார்.
    Next Story
    ×