search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏடிஏஜிஎஸ் பீரங்கி சோதனை
    X
    ஏடிஏஜிஎஸ் பீரங்கி சோதனை

    இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் ஏடிஏஜிஎஸ் பீரங்கி சோதனை

    இந்திய ராணுவத்தின் தடைப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஏடிஏஜிஎஸ் பீரங்கி இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
    பாலசோர்:

    இந்திய ராணுவத்தின் தடைப்படையின் பயன்பாட்டிற்காக,  ஏடிஏஜிஎஸ் (அட்வான்ஸ்ட் டோவ்ட் ஆர்ட்டிலரி கன் சிஸ்டம்) பீரங்கிகளை, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த பீரங்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் தாக்குதல் திறன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஏடிஏஜிஎஸ் பீரங்கி இன்று ஒடிசாவின் பாலசோர் சோதனை தளத்தில் இன்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக ஏடிஏஜிஎஸ் திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

    இது உலகின் மிகச் சிறந்த பீரங்கி என்றும், இதுபோன்ற பீரங்கி முறையை வேறு எந்த நாடும் உருவாக்கியதில்லை என்றும் அவர் கூறினார்.

    இந்த பீரங்கி வடிவமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விரைவில், இந்த துப்பாக்கி PSQR சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். பீரங்கித் துப்பாக்கி அமைப்பு தயாரிப்பில், இந்தியா மிகப்பெரிய சாதனையை எட்டும் என்று நம்புவதாக டிஆர்டிஓ அதிகாரி அனில் மார்கோகர் தெரிவித்தார்.
    Next Story
    ×