search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் இன்று முடிவு இல்லை- உச்ச நீதிமன்றம்

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று முடிவு எடுக்கப்போவதில்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவு எடுக்கப்போவதில்லை என்றும், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×