search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்கும் மக்கள்
    X
    வாக்களிக்கும் மக்கள்

    கேரளா உள்ளாட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

    கேரளாவில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை நடக்கிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. 

    முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை ஆலப்புழை ,  இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக கோட்டயம், எர்ணாகுளம் திருச்சூர் , பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் 10-ம் தேதியும், மூன்றாவது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 14-ம் தேதியும் நடை பெற்றது.

    இந்த தேர்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2015 உள்ளாட்சி தேர்தலை விட (77.76%) குறைவான வாக்குப் பதிவாகும்.

    இந்நிலையில், கேரளாவில் மூன்று கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என நம்புவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×