search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டம்

    திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டத்திற்காக 216 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
    திருப்பதி:

    நாட்டு பசுக்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவிலுக்கு ஒரு பசு மாடு தானம் என்ற திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கியது.

    இத்திட்டம் ஆந்திரம், தெலுங்கானாவை தொடர்ந்து கர்நாடக மாநிலுத்திலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி இத்திட்டத்தை பெங்களூரில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவிலில் தொடங்கி வைத்தார்.

    கோமாதாவை வணங்குவதால் சகல தேவதைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். அதனால் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இத்திட்டத்தை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இத்திட்டத்தில் பங்கேற்குமாறு பல நன்கொடையாளர்களுக்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது. அதையேற்று அறங்காவலர் குழு உறுப்பினர்களும், பல முக்கிய பிரமுகர்களும் 216 பசுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.

    திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலை மூலம் பசுக்கள் தானமாக பெறப்பட்டு கோவில்களுக்கு வழங்கப்படும்.

    ஆந்திர, தெலுங்கானா, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
    Next Story
    ×