search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பினராயி விஜயன் ஓட்டு போட்ட காட்சி
    X
    முதல்வர் பினராயி விஜயன் ஓட்டு போட்ட காட்சி

    கேரளாவில் இறுதிக்கட்ட உள்ளாட்சி தேர்தல்- கண்ணூர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார் பினராயி விஜயன்

    கேரள மாநிலத்தில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 8ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 10ம் தேதியும் நடைபெற்றது. மொத்தம் 10 மாவட்டங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில், 354 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6,867  வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முதல்வர் பினராயி விஜயன் காலையிலேயே கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

    இந்த தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இன்றைய தேர்தலில் 89.74 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். மொத்தம் 10,842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக, பதற்றம் நிறைந்த 1,105 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 

    மூன்று கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (16ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    Next Story
    ×