search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
    X
    ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

    ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

    ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 

    இந்நிலையில் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 31 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் பதவிகள் தவிர, இன்று 77 பஞ்சாயத்து தலைவர், 334 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

    31 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளிலும் 245 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 7.48 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2071 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
    Next Story
    ×