search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ரேக்கா ஆர்யா
    X
    மந்திரி ரேக்கா ஆர்யா

    உத்தரகாண்ட் மாநில மந்திரிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று

    உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ரேக்கா ஆர்யாவுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    டெராடூன்:

    இந்தியாவில் தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிவருகிறது. வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல்வாதிகளும் இலக்காகி வருகின்றனர்.

    அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநில மந்திரியும் இடம் பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, விலங்குகள் நலத்துறை, மீன்வள மேம்பாடுத்துறை ஆகிய துறைகளுக்கு மந்திரியாக செயல்பட்டுவருவபர் ரேக்கா ஆர்யா.

    இவர் தனது குடும்பத்தினருடன் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

    அதில் ரேக்கா ஆர்யா, அவரது கணவர் மற்றும் 3 மகன்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரேக்கா ஆர்யாவும் அவரது குடும்பத்தினரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ரேக்கா ஆர்யா வெளியிட்டுள்ள பதிவில், தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் லேசான அறிகுறியுடன் இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளதால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாகவும், தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×