search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரிசையில் நின்று ஓட்டளித்த வாக்காளர்கள்
    X
    வரிசையில் நின்று ஓட்டளித்த வாக்காளர்கள்

    கேரளா உள்ளாட்சித் தேர்தல் - 2-ம் கட்ட தேர்தலில் 76.38 சதவீதம் வாக்குப்பதிவு

    கேரளாவில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.38 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 8-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாவட்டங்களில் இறுதிக்கட்ட நிலவரப்படி மொத்தம் 72.67 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை விட (75.11 சதவீத) வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 

    இதற்கிடையே, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று நடைபெற்றது. 451 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8,116 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்த 5 மாவட்டங்களில் 47 லட்சத்து 28 ஆயிரத்து 489 ஆண் வாக்காளர்கள், 51 லட்சத்து 28 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 93 திருநங்கைகள் உள்பட மொத்தம் 98 லட்சத்து 57 ஆயிரத்து 208 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் 57 ஆயிரத்து 895 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள்.

    12,643 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ள நிலையில், 63 ஆயிரத்து 187 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டர். பதற்றமான 473 வாக்குச்சாவடிகளை ஆன்லைன் மூலம் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இந்நிலையில், கேரளாவில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.38 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    மூன்று கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 16-ம் தேதி எண்ணப்படுகிறது.
    Next Story
    ×