search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி
    X
    அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி

    சுயசார்பு இந்தியாவின் சாட்சியாக புதிய பாராளுமன்ற கட்டிடம் திகழும் -மோடி பெருமிதம்

    புதிய பாராளுமன்ற கட்டிடம் சுயசார்பு இந்தியா உருவாக்கத்திற்கு சாட்சியாக மாறும் என அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் ஆகும். 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இது பெருமை சேர்க்கும் நாள். நாம் அனைவரும் சேர்ந்து இந்த புதிய கட்டிடத்தை கட்டி முடிப்போம். 

    எம்.பி.யாக 2014 ல் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு கிடைத்த அந்த தருணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தின் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, நான் தலைகுனிந்து இந்த ஜனநாயக கோவிலுக்கு வணக்கம் தெரிவித்தேன்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் சுயசார்பு இந்தியா உருவாக்கத்திற்கு சாட்சியாக மாறும். ஜனநாயகம் என்பது இந்தியாவில் ஒரு கலாச்சாரம். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை மதிப்பு, ஒரு வாழ்க்கை முறை மற்றும் தேசத்தின் ஆன்மா. இந்திய ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டு அனுபவத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

    இந்த சமயத்தில் இந்தியாதான் முதலில் என்ற உறுதிமொழியை நாம் எடுக்க வேண்டும். நமது முடிவுகள் தேசத்தை வலிமையாக்க வேண்டும். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அடுத்த 25-26 ஆண்டுகளில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டில் அதாவது 2047-ல் இந்தியாவை எவ்வாறு பார்க்க விரும்புகிறோம் என்பதை நோக்கியதாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×