search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தலைமை தேர்தல் அதிகாரி பெயர்

    கேரளாவில் வாக்காளர் பட்டியலில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே விடுபட்டு இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் விடுபட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுவது உண்டு. ஆனால் கேரளாவில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் நடந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திருவனந்தபுரத்தின் பூஜாப்பூரா வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தீக்கா ராம் மீனா ஓட்டுபோட்டார்.

    ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் கமிஷன் தயார் செய்த வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. இது நேற்று முன்தினம் தான் அவருக்கு தெரியவந்தது. உடனே தீக்கா ராம் மீனா அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான திருவனந்தபுரம் கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே விடுபட்டு இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×