search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடித கையெழுத்து இயக்கம்: டி.கே.சிவக்குமார்

    கர்நாடக காங்கிரஸ் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடித கையெழுத்து இயக்கத்தை தொடங்குவதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் கையெழுத்து மூலம் கருத்துகளை கேட்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தேசிய தலைவி சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கர்நாடக காங்கிரஸ் சார்பில் நாங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கடிதத்தில் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்குகிறோம். மாநிலத்தில் 8.8 லட்சம் கடிதங்களை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குகிறோம். அந்த கடிதங்களில் அவர்கள் கையெழுத்து இடுவார்கள்.

    இந்த கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்புவோம். மாநில அளவில் இருந்து கிராம அளவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கடிதங்களை வழங்கி கையெழுத்துகளை பெறும் பணியில் ஈடுபடுவார்கள். கர்நாடகத்தில் ஏற்கனவே பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இப்போது அதற்கு பா.ஜனதாவினர் அரசியல்-மத சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். நமது நாட்டில் மாட்டிறைச்சியை யார் ஏற்றுமதி செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

    அவர்கள் நாட்டின் எந்த பகுதியில் உள்ளனர், அவர்கள் யார் என்பதை பா.ஜனதாவினர் தெரிந்துகொள்ள வேண்டும். மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்பவர்களின் பின்னணியையும் அவர்கள் அறிய வேண்டும். பா.ஜனதா அரசு கொண்டு வரும் பசுவதை தடை சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×