search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ஆர் அசோக்
    X
    மந்திரி ஆர் அசோக்

    காங்கிரஸ் விஷத்தை கக்கும் கட்சி: மந்திரி ஆர்.அசோக்

    காங்கிரஸ் விஷத்தை கக்கும் கட்சி. காங்கிரசை நம்பியவர்கள் கரை சேர்ந்தது இல்லை என்று மந்திரி ஆர்.அசோக் கடுமையாக தாக்கி கருத்து கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் விஷத்தை கக்கும் கட்சி. குமாரசாமியுடன் இருந்தவர்களே அவருக்கு விஷம் கொடுத்தனர். கடந்த 2006-ம் ஆண்டு குமாரசாமி தலைமையில் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது அவரது செல்வாக்கு உயர்ந்தது. ஆனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின்போது, குமாரசாமிக்கு காங்கிரஸ் தொல்லை கொடுத்தது. காங்கிரசை நம்பியவர்கள் கரை சேர்ந்தது இல்லை.

    நாட்டில் காங்கிரஸ் இனி இருக்காது. இனி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி தான். மத்தியிலும், கர்நாடகத்திலும் இன்னும் 20 ஆண்டு காலம் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும். சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அதையும் அகற்றுவோம். அங்கு பா.ஜனதா ஆட்சியை அமைப்போம். கர்நாடகத்தை பொறுத்தவரையில் முதல்-மந்திரியாக எடியூரப்பாவே நீடிப்பார். நாங்கள் பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

    கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (இன்று) முதல் பெங்களூருவில் தொடங்குகிறது. எதிர்க்கட்சி என்று ஒன்று இருந்தால் தானே அதை நாங்கள் எதிர்கொள்ள முடியும். காங்கிரசை நம்ப வேண்டாம் என்று குமாரசாமி கூறியுள்ளார். காங்கிரஸ் தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. அதனால் காங்கிரசை எதிர்கொள்ள நாங்கள் தயாராக வேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. மந்திரிசபை விஸ்தரிப்புக்கு எங்கள் கட்சி மேலிடம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதை மேலிடத்திற்கு எடியூரப்பா தெரிவித்துள்ளார். அது இன்னும் பரிசீலனையில் உள்ளது. எங்கள் கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்துள்ளார். அவர் மாநிலத்தின் கட்சியை பலப்படுத்துவது மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே கேட்டறிந்தார்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
    Next Story
    ×