search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் மந்திரி தோமர்
    X
    வேளாண் மந்திரி தோமர்

    மோடி அரசு மீது விவசாயிகள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் - வேளாண் மந்திரி பேச்சு

    மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகள் நலனுக்காகவே இருக்கும். மோடி அரசு மீது விவசாயிகள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 10-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேளாண் குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

    இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விவசாய குழு தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    குறைந்த பட்ச ஆதார விலை நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். அதற்கு எந்த ஒரு ஆபத்தில் இல்லை. இதில் ஏற்பட்டுள்ள சந்தேகம் ஆதாரமற்றது. யாருக்கேனும் இன்னும் இதில் சந்தேகம் இருந்தால் அதை தீர்த்துவைக்க அரசாங்கம் தயாராக உளது.

    அனைத்து அம்சங்களையும் அரசு பரிசீலிக்கும் என்று விவசாயிகளிடம் கூறியுள்ளோம். விவசாய குழு தலைவர்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்பதால் தீர்வுகளை காண்பது எங்களுக்கு சுலபமாக உள்ளது. 

    கொரோனா, குளிர்காலத்தை கருத்தில் கொண்டு முதியோர்களையும், குழுந்தைகளையும் வீட்டிற்கு அனுப்பவேண்டும் என விவசாய குழுக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    விவசாய யூனியன்களின் நிகழ்ச்சிகள் பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால், விவசாயிகள் மற்றும் விவசாய யூனியன்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவசாய குழுக்களுடன் அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும், பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளது. 

    விவசாயிகளுக்காகவே மோடி அரசு இருக்கிறது என உறுதியளிக்கிறேன். வருங்காலங்களில்ம் அவ்வாறே இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் பல வேளாண் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் மற்றும் குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மோடி அரசு மீது விவசாயிகள் தொடர்ந்து நம்பிக்கைவைக்க வேண்டும். மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும். ஒழுக்கத்தை கடைபிடித்துவரும் விவசாய யூனியன்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் 9-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளோம். இந்த குளிர்காலத்தில் சிரமப்படுவதை தவிர்க்க விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

    என்றார். 
    Next Story
    ×