search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சித்சிங் டிசேல்
    X
    ரஞ்சித்சிங் டிசேல்

    சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற மகாராஷ்டிரா ஆசிரியர்

    மகாராஷ்டிராவை சேர்ந்த ஆசிரியர் சர்வதேச ஆசிரியர் விருதை வென்றுள்ளார்.
    மும்பை:

    துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.  

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சர்வதேச சிறந்த ஆசிரியருக்கான விருதினை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசேல் (32) வென்றார்.

    இவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பரிடிவாடி கிராமத்தில் உள்ள தொடக்கநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ரஞ்சித்சிங் டிசேலுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 கோடியே 40 லட்சம்) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது பரிசுத்தொகையில் 50 சதவிகிதத்தை சிறந்த ஆசிரியர் விருதுக்கு போட்டியிட்ட மேலும் 9 பேருக்கு பிரித்து வழங்குவதாக அவர் அறிவித்தார்.

    இவர் பரிடிவாடி கிராம தொடக்கப்பள்ளியில் சேர்ந்தபின்னர் உள்ளூர் மொழியில் பாட புத்தகத்தை உருவாக்கி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக க்யூ ஆர் கோர்டு உருவாக்கி பாடங்களை ஆடியோ, வீடியோ மற்றும் கதை வடிவில் தொகுத்து பயிற்றுவித்து வருகிறார். 

    இவரின் இந்த முயற்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிடிவாடி கிராமத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது 100 சதவிகிதம் உறுதியாகியுள்ளது. மேலும், குழந்தை திருமணங்கள் எதுவும் அக்கிராமத்தில் நடைபெறவில்லை. இந்த செயல்பட்டிற்கு ரஞ்சித்சிங்கிற்கு
    சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×