search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் தலையை வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
    X
    தபால் தலையை வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

    முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நினைவு தபால் தலை- துணை ஜனாதிபதி வெளியிட்டார்

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது குஜ்ராலும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு சிறையில் கஷ்டப்பட்டனர் என்பதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நினைவுகூர்ந்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். மேலும் அவரது நினைவை போற்றி அவரது பணிகளை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுள்ளது. தபால் தலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். 

    அப்போது பேசிய துணை ஜனாதிபதி, ஐ.கே.குஜ்ராலின் சாதனைகளை கூறினார். மேலும், 1940களில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது குஜ்ராலும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டு கஷ்டப்பட்டனர் என்பதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நினைவுகூர்ந்தார்.

    வரலாற்றில் மிக மோசமான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், அனைத்து நாடுகளும், குறிப்பாக தெற்காசிய நாடுகள், பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×