search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிர்ஹாத் ஹக்கீம்
    X
    பிர்ஹாத் ஹக்கீம்

    மேற்கு வங்காள மந்திரிக்கு கொரோனா தடுப்பூசி சோதனை

    மேற்கு வங்காள நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரிக்கு கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்றது.
    கொல்கத்தா:

    கொரோனாவை தடுப்பதற்காக ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

    இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை, மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் ஐ.சி.எம்.ஆர்- தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனத்தில் மாநில கவர்னர் ஜக்தீப் தாங்கர் நேற்று தொடங்கிவைத்தார்.

    அப்போது மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி பிர்ஹாத் ஹக்கீம் (வயது 62), தடுப்பூசி சோதனையில் பங்கேற்றார். அவருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தடுப்பூசி சோதனையில் நான் அங்கம் வகித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தடுப்பூசி போட்ட பின்னர் நான் நன்றாக உள்ளேன். இந்த சோதனையில் நான் இறந்தால்கூட கவலைப்பட மாட்டேன்” என கூறினார்.

    சுமார் ஆயிரம் பேருக்கு இங்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சண்டிகாரில் பஞ்சாப் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது.

    அப்போது கேப்டன் அமரிந்தர் சிங், “தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்ததும், பஞ்சாப்பில் முதல் டோஸ் தடுப்பூசியை நான் போட்டுக்கொள்வேன்” என அறிவித்தார்.

    இந்த மாநிலத்தில் முதல் கட்டமாக 1¼ லட்சம் அரசு மற்றும் தனியார் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தரவுகளை அரசு சேகரித்துள்ளதாக சுகாதார செயலாளர் ஹூசன் லால் தெரிவித்தார்.
    Next Story
    ×