search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய சங்கத்தலைவர் தர்சன் பால்
    X
    விவசாய சங்கத்தலைவர் தர்சன் பால்

    மோடி அரசுக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு போராட்டத்திற்கு அழைப்பு: விவசாயிகள்

    டெல்லியில் தங்கி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை கடந்த 7-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    டிசம்பர் 3-ம்தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்தையடுத்து நேற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலில் மறுத்த விவசாய குழு தலைவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

    மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். விவசாயிகள் குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே மாலை 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் குழு அறிவித்துள்ளது.

    அதேவேளையில் சில விசயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதற்கென அவசர சட்டத்தை கொண்டு வர 10 நிமிடங்களே தேவைப்படும். சஸ்பெண்ட் செய்யவில்லை எனில் போராட்டம் தொடரும் என விவசாயக்குழுகள் தெரிவித்துள்ளன.

    அறுவடையை முடித்துள்ள பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் நான்கு மாதத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு முடிவு வரும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    மேலும், வருகிற ஐந்தாம் தேதி மோடி அரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் கொடும்பாவி எரிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×