search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும்: மந்திரி சுதாகர்

    கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்றும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
    பெங்களூரு:

    பெங்களூரு மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

    எச்.ஐ.வி. கிருமி அதாவது எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். கொரோனா பரவிய நேரத்தில், கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டுமே தவிர, தொற்று பாதித்த நோயாளிகளுக்கு எதிராக அல்ல என்ற செய்தி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி, அனைத்து நோய்களுக்கும் பொருந்தும். எய்ட்ஸ் நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

    நல்ல மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுவதால் எய்ட்ஸ் நோய்க்கு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 99 வயதான எய்ட்ஸ் நோயாளிகள் கூட உடல் ஆரோக்கியமாக இருப்பதை காண முடிகிறது. அந்த அளவுக்கு சிகிச்சைகள் இருக்கின்றன. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று முதலில் கூறப்பட்டது.

    கர்நாடகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் 280 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதில் 275 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து நல்ல முறையில் உள்ளனர். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருந்துகளை இலவசமாக வழங்க சுகாதார மையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி தற்போது சோதனை நிலையில் உள்ளது. கர்நாடகத்தில் வைதேகி மருத்துவ மையத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி கிடைக்கும். முதலில் சுகாதார பணியாளர்கள், போலீசாருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும். கர்நாடகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி வினியோகம் செய்யப்படும். இதில் எந்த சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×