search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பர்கவா
    X
    ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பர்கவா

    அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியா?- அரசு அப்படி சொல்லவே இல்லை என்கிறது ஐசிஎம்ஆர்

    நம்முடைய நோக்கமே கொரோனா தொடர்பு செயினை உடைப்பதுதான். ஆகையால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வேண்டியதில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி ஏறக்குறைய கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுமா? கொரோனா இலவசமாக வழங்கப்படுமா? குறைந்து விலையில் கிடைக்குமா? என்பதுதான் மில்லியன் கேள்விக்குறி.

    இந்த நிலையில் ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பர்கவா கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த நாட்டுக்கும் தடுப்பூசி என்பதை அரசு ஒருபோதும் கூறவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். உண்மை தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இத்தகைய விஞ்ஞான சிக்கல்களை நாங்கள் விவாதிப்பது முக்கியம். முழு நாட்டிற்கும் தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும் என்று சுகாதார செயலாளரிடம் கேட்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி அதன் திறன் எப்படி இருக்கிறது என்பதை சார்ந்தது. நம்முடைய நோக்கம் கொரோனா பரவுவதற்கான செயினை உடைப்பதாகும். முக்கியமான மக்களுக்கு தடுப்பூசி போடவும், வைரஸ் பரவலை உடைக்கவும் முடிந்தால், அப்புறம் நாம் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதிருக்காது’’ என்றார்.
    Next Story
    ×