search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை பாதுகாப்பு படையினர்
    X
    எல்லை பாதுகாப்பு படையினர்

    எல்லை பாதுகாப்பு படையின் 56-வது எழுச்சி நாள் - தலைவர்கள் வாழ்த்து

    எல்லை பாதுகாப்பு படையின் 56-வது எழுச்சி நாள் இன்று கொண்டடப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவு 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 1-ம் தேதி எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படையின் 56-வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எல்லை பாதுகாப்பு படை பிரிவு அமைக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 56-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் பிஎஸ்எப் படையினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சிறப்புமிக்க எழுச்சி நாளில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தேசத்தை பாதுகாப்பதிலும், இயற்கை பேரழிவுகளின் போது குடிமக்களுக்கு உதவுவதிலும் உறுதியான, தனித்துவம் மிக்க படையாக எல்லை பாதுகாப்பு படை  செயல்படுகிறது. எல்லை பாதுகாப்பு படையால் இந்தியா பெருமை கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.

    உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எல்லை பாதுகாப்பு படை எப்போதுமே அதன் குறிக்கோளான ’வாழ்க்கைக்கான கடமை’யை துணிச்சலும், வலிமையுடனும் வாழ்ந்து வருகின்றனர். 

    56-வது எழுச்சிநாளான இன்று அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக சேவை செய்யும் துணிச்சல் மிகுந்த அனைத்து எல்லை பாதுகாப்பு படையினருக்கும் எனது வணக்கத்தை செலுத்துகிறேன். வெற்றிமிகு எல்லைபாதுகாப்பு படையினரால் இந்தியா பெருமிதம் கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 1965-ம் ஆண்டு இன்றைய நாளில் மத்திய ஆயுத போலீஸ் படையில் எல்லை பாதுகாப்பு படை பிரிவு உருவாக்கப்பட்டது. 

    இந்திய எல்லைகளை பாதுகாப்பதில் முதன்மையாக உள்ள எல்லை பாதுகாப்பு படையினர் எல்லைகளை மட்டுமல்லாமல் நாட்டு மக்களையும் பாதுகாக்கிறது. எல்லை பாதுகாப்பு படையினரின் சேவைக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×