என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேருகிறார்
Byமாலை மலர்1 Dec 2020 2:36 AM GMT (Updated: 1 Dec 2020 2:36 AM GMT)
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை ஊர்மிளா மடோங்கர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை :
இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அவர் மும்பை காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, கட்சியில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் நடிகை ஊர்மிளா மடோங்கர் சிவசேனாவில் சேர இருப்பதாகவும், அவருக்கு நியமன எம்.எல்.சி. பதவி கோரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவர்னருக்கு பரிந்துரை செய்து இருப்பதாகவும் தெரியவந்தது.
இந்தநிலையில் நடிகை ஊர்மிளா மடோங்கர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் சேர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான தகவலை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய உதவியாளர் ஹர்சால் பிரதான் தெரிவித்து உள்ளார்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு நடிகை ஊர்மிளா மடோங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×