search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம்: எடியூரப்பா

    மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் 2, 3 நாட்களில் நடைபெறும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபை இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியானது. மந்திரி பதவிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. மந்திரிசபையில் யார்-யாருக்கு இடம் வழங்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய மந்திரிகளின் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாத காரணத்தால், மந்திரிசபை மேலும் தள்ளிப்போகிறது.

    இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் இன்று (நேற்று) தொலைபேசியில் பேசினேன். மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் 2, 3 நாட்களில் நடைபெறும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் விரைவாக முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து டெல்லிக்கு சென்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசிய எடியூரப்பா, மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டார். 2, 3 நாட்களில் ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி எடியூரப்பாவை ஜே.பி.நட்டா அனுப்பி வைத்தார்.

    இந்த சந்திப்பு நடந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போய் வருவதால், அந்த பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×