search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் சரிவு

    இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக முந்தைய காலாண்டில் பொருளாதாரம் 23.9 சதவீதமாக சரிந்ததால், ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.5 சதவீதமாக சரிந்தது.

    இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. முதலாவது காலாண்டில் இது -23.9 சதவீதமாக இருந்தது. கொரோனா தொற்றின் தாக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலையில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிவை நோக்கிச் செல்வது அசாதாரணமான தாக்கமாக கருதப்படுகிறது.

    ஜிடிபி வளர்ச்சிச் சரிவு இரண்டாவது காலாண்டில் 8.8 சதவீதமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், தற்போது வெளியான முடிவுகளின்படி 8.5 சதவீதம் என்ற அளவுக்கே வளர்ச்சி சதவீதம் சரிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    இது தொடர்பாக இந்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இன்று வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டின் ஜிடிபி அறிக்கையில் 2020-21 நிதி ஆண்டின், இரண்டாவது காலாண்டான, ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரையான செப்டம்பர் காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி -7.5 சதவிகிதம் சரிந்து உள்ளது என கூறி உள்ளது.

    மேலும் கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 35.84 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2020-21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 33.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆக -7.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ மந்தநிலையில் இந்தியா தற்போது இருப்பது உறுதியாகிறது என கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×