search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    வருகிற 5-ந் தேதி நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு

    வருகிற 5-ந் தேதி கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
    பெலகாவி :

    மராட்டிய மேம்பாட்டு கழகம் அமைப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு, வருகிற 5-ந் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. இந்த நிலையில் இந்த முழு அடைப்புக்கு காங்கிரசின் ஆதரவு இல்லை என்று அக்கட்சியின் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மராட்டிய மேம்பாட்டு கழகத்தை அமைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து கன்னட சங்கங்கள் வருகிற 5-ந் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புக்கு காங்கிரசின் ஆதரவு இல்லை. மராட்டிய மக்களின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்படும் கழகத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதால் நாங்கள் எதிர்க்கிறோம்.

    மராட்டிய மக்களின் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் கடந்த பட்ஜெட்டிலேயே இதை அறிவித்திருக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி இல்லை என்று அரசு சொல்கிறது. இத்தகைய வாரியங்களுக்கு அரசு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யும்?. பெலகாவி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பா.ஜனதா மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அக்கறை செலுத்தவில்லை.

    இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.
    Next Story
    ×