search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்: எடியூரப்பா

    கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    மைசூரு :
    முதல்-மந்திரி எடியூரப்பா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர், ஹெலிபேடில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் 4 வாரத்தில் இந்தியாவுக்கு வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் கொரோனா நோயை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த தகவலை தெரிவித்தார்.

    கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து வர உள்ளதாகவும், அதை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து அனுப்ப இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். மருந்துகளை பெற்றதும் அனைத்து மாநிலங்களும் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கி குணப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடியிடம் நானும்(எடியூரப்பா) தெரிவித்தேன். கொரோனா நோய் ஒழிந்தால் போதும். மக்கள் நலமாக வாழ்வார்கள். மேலும் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள எளிதாக இருக்கும்.

    கொரோனா நோய் கட்டுக்குள் வராத காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளன. முதலில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

    முன்னதாக ஹெலிபேடுக்கு வந்து மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி, மேயர் தஸ்நீமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து எடியூரப்பாவை வரவேற்றனர்.

    Next Story
    ×