search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா,  உமர் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி அப்துல்லா வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டது

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா வீடு சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டியுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோர் தங்களின் வீட்டை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டியுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதை தந்தை-மகன் இருவரும் மறுத்து உள்ளனர்.

    காஷ்மீரில் ரோஷ்னி நிலத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட நிலங்களை தவிர கூடுதல் நிலங்களை பலர் ஆக்கிரமித்ததாக புகார்கள் எழுந்தன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்காக இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த காஷ்மீர் ஐகோர்ட்டு கூறியிருந்தது. இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட நிலங்களை தவிர வேறு பொதுநிலங்களை ஆக்கிரமித்ததாக கூறப்படுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    அதில் முன்னாள் முதல்- மந்திரிகளான அப்துல்லாக்களின் ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட வீடு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருப்பதாக பட்டியல் காண்பிக்கப்பட்டு உள்ளது.

    “பரூக் அப்துல்லா ரோஷ்னி சட்டத்தின் பயனாளி என்று கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் தீங்கிழைக்கும் உள்நோக்கம் கொண்டது” என்று உமர் அப்துல்லா கூறி உள்ளார். இந்த விவகாரம் காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.
    Next Story
    ×