search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    டிசம்பர் 1 முதல் ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக வைரலாகும் தகவல்

    இந்தியாவில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் போலி செய்திகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படுவது ஒவ்வொருத்தரின் கடமையாகி உள்ளது.

    அந்த வரிசையில், வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் குறுந்தகவல் ஒன்றில் இந்தியாவில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ரெயில்வே சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்திற்கென அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில் சேவையும் நிறுத்தப்பட இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    உண்மையில் ரெயில் சேவை நிறுத்தப்படுகிறதா என இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வைரல் தகவலில் துளியும் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. 

    விளக்கப்படம்

    மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வைரல் தகவல்களில் உண்மையில்லை என்றும் மத்திய ரெயில்வே துறை இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை என தனது சமூக வலைதளங்களில் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ரெயில் சேவைகள் நிறுத்தப்படாது என்பது தெளிவாகி விட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×