search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை

    கர்நாடகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது
    பெங்களூரு:

    கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து கடந்த 17-ந் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

    அதே வேளையில் கல்லூரிகளுக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்பு, நிருபர்களை சந்தித்த எடியூரப்பா, “குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதனால் வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.” என்று கூறினார்.
    Next Story
    ×