
அதேவேளையில் கேரளா, டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் 3-ம் கட்ட அலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மேற்கு வங்காளத்தில் புதிதாக 3,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,59,918 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,072 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தற்போது 25,030 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து இன்று 3,687 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4,26,816 பேர் குணமடைந்துள்ளனர்