search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு
    X
    கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு

    கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: தீர்ப்பு தேதி அறிவிப்பு

    கங்கனா ரணாவத்தின் அலுவலகம் மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.
    மும்பை:

    மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என கூறி மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா அரசை நடிகை கங்கனா ரணாவத் விமர்சம் செய்தார்.

    இதனால் ஆத்திடமடைந்த சிவசேனா அரசு மும்பையில் உள்ள கங்கானாவின் வீடு-அலுவலக கட்டுமானங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என கூறி அதனை மும்பை மாநகராட்சி இடித்தது.

    இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தின் தலையீட்டால் கட்டிட இடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
    Next Story
    ×