search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    எனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை: குமாரசாமி வேதனை

    நீங்கள் எனது விவசாய கடனை தள்ளுபடி செய்தீர்கள் என்று விவசாயிகள் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டம் பெங்களூரு தாசரஹள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.25 ஆயிரம் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். இதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பல்வேறு வழிகளில் திரட்டினேன். எனது ஆட்சியில் இந்த தொகுதி ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. மஞ்சுநாத் தனிப்பட்ட முறையில் என்னிடம் உதவி கேட்கவில்லை. இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குமாறு கேட்டார்.

    பெங்களூருவில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதாக கட்சிகள் சொல்கின்றன. யாரும் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவது இல்லை. 14 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்தபோது நான் பட்டகஷ்டம் எனக்கு தான் தெரியும். சித்தராமையா அரசு 10 சதவீத கமிஷன் அரசு என்று பிரதமர் மோடி கூறினார். பா.ஜனதா அரசு கமிஷன் அரசு என்று சித்தராமையா பேசினார்.

    ஆனால் எனது அரசை அவ்வாறு யாரும் குறை கூற முடியாது. பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் பெற்றோர் கட்டணத்தை செலுத்துவது நிற்கவில்லை. தனியார் பள்ளிகளை போல் தரமான பள்ளிகளை அரசு திறக்க வேண்டும். நீங்கள் எனது விவசாய கடனை தள்ளுபடி செய்தீர்கள் என்று விவசாயிகள் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.
    Next Story
    ×