search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல், சோனியா காந்தி
    X
    ராகுல், சோனியா காந்தி

    காங்கிரசின் கட்டமைப்பு உடைந்துவிட்டது - குலாம்நபி ஆசாத் பளிச்

    காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு உடைந்துவிட்டது என அக்கட்சின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பீகார் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, அக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

    குறிப்பாக, கபில் சிபல் காங்கிரஸ் கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் கபில் சிபலுடன் சேர்த்து குலாம்நபி ஆசாத்தும் உள்ளடக்கம். ஆசாத்தும் சிபலுக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். 

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று கருத்து தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு குலாம்நபி ஆசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் (காங்கிரஸ்) கட்சியின் கட்டமைப்பு உடைந்துவிட்டது. நாம் அந்த கடமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். அதன்பின் அந்த கட்டமைப்பு மூலம் ஏதேனும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படால் அது சரியாக வேலை செய்யும். 

    ஆனால், தலைவரை மாற்றுவதால் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம் என்றால் அது தவறு. கட்டமைப்பை மாற்றுவதன் மூலமே அது நடைபெறும்.

    நன்மைபெறுவதற்காக மட்டும் ஒத்திசைந்து செல்லும் கலாச்சாரம் கட்சி மற்றும் தலைவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும். அது எங்கள் கட்சியாக இருந்தாலும் சரி மற்ற கட்சியாக இருந்தாலும் சரி...

    நாம் அனைத்து நிலைகளிலும் அந்தவகை கலாச்சாரத்தில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அரசியல் என்பது ஒரு தவம்.

    காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லை. எதிர்ப்பாளர்கள் என்பது ஒருவரை ஒரு இடத்தில் இருந்து மாற்றி அந்த இடத்திற்கு மற்றொருவரை கொண்டுவருவது. கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு வேட்பாளர்கள் கிடையாது. இது எதிர்ப்பு கிடையாது. இது சீர்திருத்த நடவடிக்கை.

    என்றார்.  
    Next Story
    ×