என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்தது: பிரதமர் மோடி
Byமாலை மலர்21 Nov 2020 6:59 PM GMT (Updated: 21 Nov 2020 6:59 PM GMT)
ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு மெய்நிகர் முறையில் நேற்று நடைபெற்றது. நடப்பு ஆண்டுக்கான கூட்டத்திற்கு சவுதி அரேபியா தலைமை வகித்தது.
இந்தக் கூட்டத்தில் ஜி 20 கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சவுத், கொரோனாவுக்கு எதிரான மருத்துவ கருவிகள் குறைந்த மற்றும் சமமான முறையில் அனைவருக்கும் கிடைப்பதன் முக்கியத்துவம் பற்றியும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பேசினார்.
இந்நிலையில், ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்தது. மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள், பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரம் விரைவாக மீட்டெடுப்பதை முன்னெடுத்துச் செல்லும். மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டத்தை நடத்திய சவுதி அரேபியாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×