search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியல் போராட்டம்
    X
    மறியல் போராட்டம்

    அகதிகள் மறுவாழ்வு பணிகளுக்கு கடும் எதிர்ப்பு... திரிபுரா நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் மறியல்

    திரிபுராவில் புரு அகதிகளின் மறுவாழ்வு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தினால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அகர்தலா:

    மிசோ பழங்குடியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மிசோரத்திலிருந்து புரு பழங்குடியின மக்கள் 1997 ஆம் ஆண்டு வெளியேறி திரிபுராவில் தஞ்சமடைந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த சுமார் 30 ஆயிரம் அகதிகள் திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்குவதற்கான மறுவாழ்வு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. 

    இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, திரிபுரா, மிசோராம் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் புரு பிரதிநிதிகள்  முன்னிலையில் கையெழுத்தானது. இதனையடுத்து புரு அகதிகளுக்கான மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், புரு அகதிகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை கண்டித்து வடக்கு திரிபுரா மாவட்டத்தின் டோலுபரி கிராமத்தில் இன்று ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எச்சரித்தும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லாதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
    Next Story
    ×