search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: மந்திரி சுரேஷ்குமார் பதில்

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கல்லூரிக்கு வருவதில் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கல்லூரிக்கு மாணவர்கள் வருகின்றனர். கல்லூரிக்கு வருவதற்கு முன்பாக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது

    இதற்கிடையில், கர்நாடகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் கூடிய விரைவில் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் இருப்பதால், பள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனாலும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.

    மாணவ, மாணவிகளின் பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள், நிபுணர்கள் கூறும் கருத்துகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கேட்டறிந்து வருகிறார்கள். கொரோனா காரணமாக பள்ளிகளை திறக்க எதிர்ப்புகள் உள்ளன. அதுபோல, பள்ளிகள் திறக்க வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். ஆதரவும், எதிர்ப்பும் இருப்பதால், மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக உரிய ஆலோசனை நடத்திய பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×