search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகி ஆதித்யநாத்
    X
    யோகி ஆதித்யநாத்

    பகீர் தகவலுடன் வைரலாகும் யோகி ஆதித்யநாத் வீடியோ

    உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ பகீர் தகவலுடன் வைரலாகி வருகிறது.


    உத்திர பிரதேச மாநிலத்தில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் வீட்டில் பட்டாசு வெடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, பட்டாசு விற்பனை செய்த தந்தையை விடுவிக்க போராடும் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரல் வீடியோ, பட்டாசு விற்றதாக கூறி இந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர், தீபாவளி தினத்தன்று யோகி ஆதித்யநாத் தன் வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்கிறார் எனும் தகவலுடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு முன் யோகி ஆதித்யநாத் தன் வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்கும் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மற்றொரு வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது ஆகும். 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வீடியோவில் சிறுமியின் தந்தை பட்டாசு விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டு, பின் சிறுமி அழும் வீடியோ வைரலானதால் அவர் விடுவிக்கப்பட்டார். யோகி ஆதித்யநாத் பட்டாசு வெடிக்கும் வீடியோ ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டது ஆகும்.

    அந்த வகையில் யோகி ஆதித்யநாத் தன் வீட்டு வாசலில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த வகையில் வைரலாகும் இரு வீடியோக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×