search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி மது (மாதிரி படம்)
    X
    போலி மது (மாதிரி படம்)

    உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 11 பேர் பலி... தவறான தகவல் என்கிறது போலீஸ்

    உத்தர பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிந்ததாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை அருந்துவோர் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிலர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மூலம் தகவல் வெளியானது. 

    இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கான எந்த ஆதாரும் இல்லை என போலீசார் கூறி உள்ளனர். 

    ஹாபூர் எஸ்பி விக்ராந்த் வீர் இதுபற்றி கூறுகையில், ‘ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மூலம் இந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் நடத்திய விசாரணையில், கள்ளச்சாராயத்தினால் இறந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

    இதுவரை 8 பேர் மரணம் அடைந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார், மற்றவர்கள் இயற்கை மரணம் அடைந்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  விசாரணைக்கு பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

    கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கையை தொடங்கி உள்ள கலால் துறை, டிசம்பர் 3ம் தேதி வரை சோதனையை தீவிரப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×