search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டெல்லியில் வரும் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வழக்கறிஞர் எம்எல் சர்மா தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. கடந்த முறை நடந்த விசாரணையின்போது வழக்கை திரும்ப பெறும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், இன்று மனுவை ஏற்றனர். 2 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×