search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுராக் தாக்குர்
    X
    அனுராக் தாக்குர்

    காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - பாஜக பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமனம்

    காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22-ம் தேதி நடைபெறும்.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும். காஷ்மீரில் வலுக்கட்டாயத்துடன் சட்டங்களை அமல்படுத்தி வருபவர்களை தோற்கடிக்க முயற்சிப்போம் என காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கிரேட்டர் ஐதராபாத் நகராட்சி தேர்தல் பொறுப்பாளராக பா.ஜ.க. தேசிய செயலாளர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×