search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கபட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    திருவனந்தபுரம்:

    ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    நடை திறப்பதையொட்டி பம்பை, நிலக்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பம்பை ஆற்றில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழுடன் பக்தர்கள் வர வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×