search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

    டெல்லியில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் -கெஜ்ரிவால்

    டெல்லியில் அடுத்த 7 முதல் 10 தினங்களுக்குள் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனா நிலவரம், நோய்த்தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அடுத்த வாரம் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். 

    7 முதல் 10 நாட்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்க வேண்டும். இதற்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

    டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததற்கு மாசு மிகப்பெரிய காரணம். அக்டோபர் 20 வரை நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் நேற்று 7053 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4.67 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 104 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7332 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×