search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஆசியான் அமைப்புடன் தொடர்பை அதிகரிக்க இந்தியா முன்னுரிமை - பிரதமர் மோடி பேச்சு

    ‘ஆசியான்’ அமைப்புடன் எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கமான ‘ஆசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.

    பல ‘ஆசியான்’ நாடுகளுக்கு தென்சீன கடல் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளது.

    இந்தியா-ஆசியான் இடையிலான 17-வது உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமரும் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.

    மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இணக்கமான, பரிவான ‘ஆசியான்’ அமைப்பு தேவை என்று நாங்கள் கருதுகிறோம்.

    இந்தியாவுக்கும், ஆசியான் அமைப்புக்கும் இடையே எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.

    பொருளாதாரம், சமூகம், மின்னணு, நிதி, கடல்சார் விவகாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தொடர்பை வலுப்படுத்த விரும்புகிறோம். கடந்த சில ஆண்டுகளில், இத்துறைகளில் நெருங்கி வந்து விட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×