search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    கொரோனா வைரஸ் காலத்தில் ரூ.30 லட்சம் கோடி சலுகை - மத்திய அரசு அறிவிப்பு

    கொரோனா வைரஸ் காலத்தில் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் அறிவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.இந்த தருணத்தில் பொருளாதார பின்னடைவில் இருந்து நாட்டை மீட்டு வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்கிற வகையில் மத்திய அரசு தொடர்ந்து சலுகை அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது.

    அந்த வரிசையில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உர மானியம், விவசாயிகளுக்கு கடன் உதவி, வீடு வாங்குவோருக்கு சலுகை, நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய சலுகை என ரூ.2.65 லட்சம் கோடி சலுகை திட்டங்களை டெல்லியில் நிருபர்களிடம் அறிவித்தார்.இதுவரை சுமார் ரூ.30 லட்சம் கோடி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் அளவுக்கு சலுகைகள் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×